பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அவசர அறிவித்தல்! tamil lk news

 

tamil lk news-srilanka

அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள்

இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அல்லது வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், 


எதிர்காலத்தில் சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும்  பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்