திருகோணமலை பாலத்தோப்பூர் சேருவில பிரதான வீதியில் நெல் உலர விடப்படுவதால் இவ் வீதியூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதோடு, விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில், தோப்பூர் பகுதி மக்கள் திருகோணமலை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, இனிமேல் இவ் வீதியில் நெல் காய வைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் இல்லாவிடின் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை நிறைவேற்றுப் பொறியியலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
trincomalee tamil news
Tags:
trincomalee