யாழில் 13 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்கு ஏற்பட்ட சிக்கல்! tamil lk news

 (jaffna tamil news) உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி கைது செய்யப்பட்டார்.

tamil lk news-jaffna tamil news


சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும், உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் பேருந்து ஏறி யாழ்ப்பாணம் வந்து, அவற்றை விற்பனை செய்து விட்டு, மீண்டும் இரவு 08 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.


இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு செல்லப்பட்ட நிலையில், 13 வயது சிறுமியை தனியாக வேலைக்கு அமர்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்களை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்