சினோபெக் மற்றும் ஐஓசி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலை மாற்றம்! tamil lk news

 இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் சினோபெக் நிறுவனமும் அதிகரித்துள்ளது.

tamil lk news


இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதன்படி அதன் புதிய விலை 368 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாயாகும்.


இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 360 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.


இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்