(vavuniya news) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சந்தேகநபர் தப்பி ஓடியதையடுத்து, அவரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தாெடர்பில் கடந்த 26.01.2024 அன்று நெளுக்குளம் பொலிஸாரினால் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் குறித்த இளைஞன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து, வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் குறித்த இளைஞன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போதே அவர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |