சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்த கைது!

  

Tamil lk News


பிலியந்தலை போகுந்தர பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தின் ஊடாக சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக 36 வயதுடைய  பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த பெண் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 




குறித்த சந்தேகநபர் சட்டத்துக்கு முரணான விதத்தில் சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்த பிலியந்தலை பகுதியிலுள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.




இதுதொடர்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆவணங்களையடுத்து இது தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீட்டித்துள்ளது. 




இந்நிலையில் குறித்த பெண் கடந்த 29 ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் 500,000 இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்