காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
காதலர் தினம் போன்ற விசேட தினங்களைக் கொண்டாடும் போது 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடுகள்
கடந்த ஆண்டு, பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான வன்முறைகள் குறித்தும் கிட்டத்தட்ட 3,000 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தினத்தில் சிறுவர்கள் பரிசு பொருட்களை அதிகளவு பரிமாறிக்கொள்வதாகவும், தேவையற்ற இடங்களில் சுற்றித்திரிவதனாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |