தங்க விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்....!

  

Tamil lk News

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த வார இறுதி முதல் தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இன்று இந்த சிறியளவான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


 

அதேவேளை தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.



22 கரட் தங்கம் பவுண் ஒன்று 309,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.



 இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.



இதேவேளை, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்