(jaffna tamil news) யாழ்ப்பாணத்தில் அரச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து
அதிக வேகத்தில் பயணிகளை ஏற்றி வவுனியா நோக்கி பயணித்த பேருந்து மோட்டார் சைக்கிளை மோதிய பின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி புதைந்துள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆயினும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.