வவுனியாவில் 200 ஏக்கர் வரையிலான நெற் பயிற்செய்கை பாதிப்பு! விவசாயிகள் பரிதாபம்! vavuniya news

 (vavuniya tamil news) வவுனியா, பாவற்குளத்தின் கீழான பகுதியில் செய்கை பண்ணப்படும் 200 ஏக்கர் வரையிலான நெற் செய்கை நீர் விநியோகிக்கததால் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

vavuniya tamil news


பாவற்குளத்தின் கீழ் கால போக நெற் செய்கை குளத்து நீர்பாசனத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பலர் அதனை அறுவடை செய்து வரும் நிலையில சீரற்ற காலநிலையால் மழை தாக்கம் காரணமாக சில விவசாயிகளின் பயிர்கள் பாதிப்படைந்த நிலையில் மீள விதைத்திருந்தனர். இவ்வாறு மீள மற்றும் தாமதமாக விதைக்கப்பட்ட சுமார் 200 ஏக்கர் நெற் செய்கையில் தற்போது கதிர் நிலைக்கு வரவுள்ள பயிர்களுக்கு நீர் தேவையாகவுள்ளது.

ஆனால், பாவற்குளத்தின் நீரை சிறுபோகத்திற்கு தேவை எனக் கூறி திறக்க மறுப்பதால் தற்போது 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிற் செய்கை நிலங்கள் அறுவடைக்கு இரண்டு - மூன்று வாரங்கள் உள்ள நிலையில் பயிர்கள் வெப்பம் காரணமாக பாதிப்படைந்துள்ளன. போதிய கதிர் தாக்கம் இல்லாது பயிர்கள் அழிவடையும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.


இதன்காரணமாக, பொருளாதார நெருக்கடிக்குக்கு மத்தியில் பயிற் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் அறுவடை நிலைக்கு வரவுள்ள பயிர்கள் கண் முன்னே அழிவதைக் கண்டு கண்ணீர் விடுவதுடன், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்