ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிவபெருமான் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து, 14 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் சிவபெருமான் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற 14 குழந்தைகள் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் உடனடியாக கோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராவார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து கவலை தெரிவித்த அவர்,
படுகாயமடைந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேல் சிகிச்சை தேவைப்பட்டால், காயமடைந்த குழந்தைகள் ஜெய்ப்பூருக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே படுகாயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆத்திரமடைந்த குழந்தைகளின் உறவினர்கள், ஊர்வல ஏற்பாட்டாளர்களை தாக்கினர்.
படுகாயமடைந்த குழந்தைகளில் ஒரு குழந்தை 70 சதவீதம் காயங்களும், மற்ற குழந்தைகளுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக ஐஜி ரவிதுத் கவுர் தெரிவித்துள்ளார்.
படுகாயமடைந்த அனைத்து குழந்தைகளும் 9 முதல் 16 வயதுக்கு உள்பட்டவர்கள். இந்த விபத்து சம்பவம் குறித்து உள்ளூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



