பாடசாலை மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு வவுனியாவில் சம்பவம்...! vavuniya news

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.


கடந்த சனிக்கிழமை (23) மாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் சிறிதரன் அனார்த்தினி வயது 16 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



 மேலதிக விசாரணை

மாணவியின் மரணத்திற்கு காதல் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்