சிவராத்திரி வழிப்பாட்டிற்கு சென்ற இருவருக்கு நேர்ந்த கதி....! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்...!

 

mannar news

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி இன்று (08.03.2024) மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.


இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.



குறித்த சம்பவம்  (08.03.2024) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது. தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரையானது.




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்