தடம் மாறி தண்டளவாளத்தில் பயணித்த பேருந்து....!

 

srilanka tamil news

தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


கொழும்பு - கனேமுல்ல புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (08.03.2024) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த பஸ் புகையிரத பாதையை சேதப்படுத்தியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கொழும்பு நோக்கி செல்லும் புகையிரத பாதை சேதமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.



மாலை 6.55 மணியளவில் புகையிரத பாதையில் பஸ் ஓடியதுடன் புகையிரத பாதையில் நிறுத்தப்பட்டதால் பிரதான வீதியில் புகையிரத போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் கணேமுல்ல பொலிஸார் மற்றும் புகையிரத திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்