மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



