சாந்தனின் பூதவுடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நல்லடக்கம்....! jaffna news

 (jaffna tamil news)சாந்தனின் பூதவுடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 28 ஆம்  திகதி (28) காலை காலமானார்.

jaffna tamil news


இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின்னர் நேற்றையதினம் மாலை அவரது சொந்த இடமான யாழ் உடுப்பிட்டிக்கு கொண்டுவரப்பட்டு இன்றையதினம் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இறுதி கிரியைகள் இடம்பெற்று தற்போது  அவரது பூதவுடல்  ஊர்வலமாக  எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.


அதேவேளை வழிநெடுங்கிலும் பெருந்திரளான மக்கள் திரண்டு தமது அஞ்சலியை செலுத்தி வருவதுடன் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அடைந்ததும் அங்கு சாந்தனின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

jaffna tamil news




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்