வவுனியா பூந்தோட்டம் பகுதியில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
பூந்தோட்டம் சந்தி பகுதியில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து பூந்தோட்டம் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களில் குறித்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
கிராமமட்ட பொது அமைப்புக்கள் என்று உரிமை கோரி ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளில், பூந்தோட்டம் சந்தியை பிரதானமாகக் கொண்ட கிராம எல்லைகளுக்குள் மதுபானசாலைக்கான அனுமதியை வழங்காதே என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
Vavuniya-news



