59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம்(6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான 20 வயதுடைய மகனை களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவராவார். சந்தேக நபர் கடந்த 4 ஆம் திகதி தனது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்துள்ளதாகவும் அவருக்கு எதுவும் நினைவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka



