(vavuniya news) வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மதிமுகராசாவை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளையதினம் இடம்பெறவுள்ள சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த வேளையிலேயே பூசகர் மதிமுகராசா இன்றையதினம் (07.03.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சிவராத்திரி விழாவுக்காக கொண்டு செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பெளசர் போன்றன பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
Vavuniya-news



