ஒட்டுசுட்டானில் பரபரப்பு! மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார்!

 

tamil lk news

முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து மோப்ப நாய்கள் சகிதம் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை இன்றையதினம்(14) காலை முன்னெடுக்கப்பட்டது.



ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட அதிரடிப் படையினர் மோப்ப நாய் சகிதம் வீதியால் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்