ரமலான் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த தீர்மானம்...! tamil lk news


srilanka tamil news
 

எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை பயன்படுத்த சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.



காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக, காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குறித்த பாதுகாப்பு திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.


சகல காவல்துறை பிரிவுகளிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் மௌலவிகளையும் சந்தித்து சிறப்பு பாதுகாப்பு திட்டம் குறித்து விளக்கமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில் மத வழிபாடுகள் நடைபெறும் அதேவேளை 2,453 பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அந்த பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக 5,580 காவல்துறை அதிகாரிகள், 510 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவத்தினர் உட்பட 7,350 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்