வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதி விட்டு தப்பிச் சென்ற கார் ; இருவர் காயம்! vavuniya news


vavuniya news-tamil lk news

 வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று மாலை இடம்பெற்றது.



வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக மோட்டர் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஒன்று குறித்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளது.



குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும்
காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.




சேதடைந்த மோட்டர் சைக்கிள் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தப்பிச் சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள் எடுத்த புகைப்படடம் மற்றும் சிசீரீவி கணொளி உதவியுடன் வவுனியா பொலிசார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்