வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்...! tamil lk news

 

srilanka tamil news-tamil lk news

போலியான குறுஞ்செய்தி தொடர்பில் மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



அந்த அறிவிப்பில், பண்டிகைக் காலத்தில் நீங்கள் பெற்ற அல்லது பெறவிருக்கும் ஒரு பொருளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில், உங்கள் தகவல் மற்றும் வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு ஒரு மோசடியான குறுஞ்செய்தி பரப்பப்படுகிறது.




எனவே மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையத்தளங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்