பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில்(United Arab Emirates) சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் ரமழான் காலம் காரணமாக பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த இலங்கையர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சும் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து தற்போது முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
Tags:
world news