மகளை துன்புறுத்தி வீடியோ வௌியிட்ட தந்தை கைது....! Tamil lk

 வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் நோக்கில் தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபரை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த நபர் பலாங்கொடை பெட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தந்தையாவார்.

tamil lk news


கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தன் மகளைக் கவனிக்கும் பொறுப்பை, கணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, சிறுமியின் தாய் வெளிநாட்டு சென்றுள்ளார்.


சிறுமி தற்போது பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குணமடைந்த பிறகு, சிறுமி அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.


அவரது தாயார் வரும் வரை சிறுமி காப்பகத்தில் வைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்