ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை....!

 

tamil lk news

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


அண்மையில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய கனமழை ஒரே நாளில் அங்கு கொட்டித்தீர்த்ததால் போக்குவரத்து சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிக்கப்பட்டது.


இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.


அதேவேளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்போது கடுமையான வானிலை நிலவுவதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.


குறிப்பாக குடியிருப்புவாசிகள், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், சீரற்ற காலநிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பொது பொழுதுபோக்கு பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.


அதேவேளை பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்