இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி-29-05-2024
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டாகும். இழுபறியாக இருந்த கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள்.
ரிஷபம்: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதி இல்லாமல் தவித்தீர்களே, அந்த நிலை மாறும். நல்ல இடவசதியுடன் கூடிய பெரிய வீட்டில் குடிபுகுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.
மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பல வகையிலும் பொருட்கள் சேரும். எதிலும் நிதானம் தேவை.
கடகம்: திடீர் பயணம், அலைச்சல், செலவு, மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொந்தரவுகள் வந்து நீங்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நன்கு யோசித்து பொறுமையாக செயல்படுவது அவசியம்.
சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளை பேசி தீர்க்க வழி பிறக்கும். பணப் பற்றாக்குறை விலகும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று, நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. பங்குதாரர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
கன்னி: நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் -மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறைந்து, அன்யோன்யம் உண்டாகும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வெளியூர், வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும்.
துலாம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். அலைச்சல் இருந்தாலும் அனுகூலம், லாபமும் உண்டு
மகரம்: வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமையால் உடல் சோர்வு வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். பண வரவு உண்டாகும்.
கும்பம்: குடும்பத்தில் எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும். பழைய கடன் பைசலாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் உடைபடும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.
மீனம்: எதிர்பார்த்த பணம் உரிய நேரத்தில் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பதவிகள், பொறுப்புகளால் உற்சாகம் அடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் உயர் அதிகாரி பாராட்டுவார்.
(Rasi Palan Tamil.....)