வீட்டிற்குள் நுழைந்து ஆசிட் தாக்குதல்! பறிபோன மூன்று பிள்ளைகளின் தாயின் உயிர்.!

 காலி - கஹவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஆசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோனாபினுவல பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


இன்று (20) அதிகாலை 4 மணியளவில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஆரம்பகட்ட விசாரணை

குறித்த பெண் சமையலறையில் தேங்காய் திருவிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்து ஆசிட்  தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


ஆசிட் தாக்குதலுக்கு இலக்கான பெண், அயலவர்கள் மற்றும் உறவினர்களால் முச்சக்கர வண்டியில் பலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த பெண் பாடசாலை ஒன்றிற்கு உணவு தயாரித்து வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை  அம்பலாங்கொடை காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.

(Srilanka Tamil News......)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்