காட்டுக்குள் அரைகுறை ஆடையுடன் இளைஞர்களுடன் சிக்கிய யுவதிகள்

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்து  அரைகுறை ஆடையுடன் இளைஞர்களுடன்  யுவதிகள் கைது செய்யப்பட்ட  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


 இதன்போது  காட்டுக்குள் வைத்து  05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பேஸ்புக் சமூக ஊடாக,     நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள்  இணைந்துள்ளனர்.



 அதோடு  இந்தக் கூடாரங்களை அமைப்பதற்கு அனுமதியின்றி நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



இந்த குழுவினர் நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்து நெருப்பு கொளுத்தி விருந்தில் ஈடுபட்டமை வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்