ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிபயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர, மலைகள் நிறைந்த கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் தேடுதல் பணி கடினமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளான நிலையில் மீட்;பு பணியாளர்கள் விபத்து இடம்பெற்ற பகுதியை சென்றடைந்துள்ளனர்.
அவர்கள் அந்த பகுதியிலிருந்து படத்தை வெளியிட்டுள்ளனர்.



