தொடருந்தில் மோதி இளைஞர் பலி...!

 கட்டுகுருந்த மற்றும் களுத்துறை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.


அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.


குறித்த இளைஞர் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி காதொலிப்பான் (handfree) ஒன்றை காதில் அணிந்து கொண்டு பயணித்ததாக தொடருந்து நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 21 வயதுடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Srilanka Tamil News....)


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்