கொழும்பிலிருந்து யாழ் வந்த டெலிவரி பார்சலில்;பெண்ணுடன் சிக்கிய மூவர்!

 கொழும்பில்(Colombo) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna)அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொரு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூட்சுமமான முறையில்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக, பொதி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அதோடு அப் பொதியினுள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளையும் மறைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


  • சீரற்ற வானிலை - சரிந்து வீழ்ந்த மரங்கள்! யுவதி உட்பட ஜந்து பேர் பலி...!!
  • வவுனியாவில் மூன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு.!
  • எரிபொருள் விற்பனையில் திடீர் மாற்றம்!

  • இதனையடுத்து பொதியினை பெற்றுக்கொண்டவர் மற்றும் அதற்கான பணத்தினை வழங்கிய பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டு இருந்தனர்.


    கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,  கொழும்பில் இருந்து அவர்களுக்கு பொதியினை அனுப்பி வைத்த நபரை கொழும்பில் வைத்து கைது செய்துள்ளனர்.

    புதியது பழையவை
    மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்