எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) அறிவுறுத்தியுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவுகள் முன்னதாக இம்மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் மின்சார சபை அதற்கு கால அவகாசம் கோரியிருந்தது
அதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
(srilanka tamil news....)