கணவரின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு அந்தரங்க பகுதியில் மனைவி சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு, அந்தரங்க உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார் மனைவி .
ஏற்கனவே பல முறை கணவனை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், அதனை தாங்க முடியாத கணவன், முன்னெச்சரிக்கையாக மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது, சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை கணவன் சி.சி.ரி.வி. கமெரா மூலம் பதிவு செய்துள்ளார்.
இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் கணவன் மனைவிக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
(indian Tamil News...)