யாழ்ப்பாணம் (Jaffna) இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது, நேற்று (04.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் சிலர் மாதாவின் சிலையை தொட்டு வழிபட்ட வேளையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவதானித்துள்ளனர்.