முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்..! Jaffna News

 யாழ்ப்பாணம்(jaffna) - கைதடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தால் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி கைதடி  ஏ9 வீதியில் இன்றையதினம் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

tamil lk news


2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி, 


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம்  இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்