சுங்கத்துறையில்(Customs Department) வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சிவலி அருக்கொட (Seevali Arukgoda) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறான மோசடி தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரச துறைக்கு போட்டிப் பரீட்சை எழுதுபவர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி செயற்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலைவாய்ப்பு
இதனடிப்படையில், சுங்கத் திணைக்களத்தில் இணைவதற்கு அவ்வாறானதொரு முறைமை இல்லை எனவும் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களே வேலைவாய்ப்புக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Srilanka Tamil News.....)