வவுனியா வைத்தியசாலையில் தவறான முடிவெடுத்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு! Vavuniya News

 

tamil lk news

வவுனியா(Vavuniya) மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த சடலமானது இன்று(27.06.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராகக் கடமையாற்றிய மேற்படி இளைஞர் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையின் 12ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அவர் அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை நோயாளர் விடுதியில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.



நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.



இந்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Vavuniya Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்