கொழும்பை உலுக்கிய மாணவர்களின் மர்மமான மரணம்; வெளியான புதிய தகவல்!


tamil lk news


கொழும்பு(Colombo) கொம்பனி வீதி அல்டயார் அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 15 வயது மாணவி இதற்கு முன்னரும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


அதுமட்டுமல்லாது சம்பவத்தன்று உயிரிழந்த மாணவி அவள் படிக்கும்
பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே உயிரிழந்திருந்தனர்.


எனினும் மாணவனும் மாணவியும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரையில் விசாரணையில் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


67வது மாடியின் பால்கனியில் இருந்து மாணவனும் மாணவியும் தரையில் குதித்த இடத்தில் இருந்து ஒரு ஜோடி காலணிகள், பணப்பைகள், மொபைல் போன்கள் மற்றும் சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.


தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் இருவரும் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அவர்களுடன் கல்வி கற்கும் இமாம் என்ற பாகிஸ்தான் மாணவனின் தந்தைக்கு இந்த சுப்பர் குடியிருப்பில் சொந்தமாக வீடு இருப்பது தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்த மாணவனும் மாணவியும் அங்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இமாமின் நட்பின் காரணமாக மாணவனும் மாணவியும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்துள்ளது. அடுக்குமாடியின் செக்யூரிட்டி அதிகாரிகளிடம் இமாம் தனது நண்பர்கள் வந்தால் அடுக்குமாடிக்குள் நுழைய அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.



அதன்படி நேற்றுமுன்தினம் (02) மாலை பாடசாலை முடிந்து இந்த மாணவனும் மாணவியும் முச்சக்கர வண்டியில் குடியிருப்புக்கு வந்துள்ளனர்.


அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள ஜிம் இற்கு சென்று பாடசாலை சீருடைகளை கழற்றிவிட்டு மற்ற உடைகளை அணிந்து கொண்டு லிஃப்டில் 67வது மாடிக்கு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.



இமாமின் குடியிருப்பு 65வது மாடியில் இருந்தது. அவர்கள் அனைத்து பொருட்களையும் பால்கனியில் வைத்துவிட்டு 67வது மாடியில் இருந்து குதித்ததாக தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்