கொழும்பு (Colombo) - கொம்பனிவீதியின் அடுக்குமாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் எதுவும் இடம்பெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவ தினத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்து இடம்பெற்ற தருணத்தில் இருவரும் சுமுகமாக முறையில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவி உயரமான இடங்களில் இருந்து படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர் எனவும்,புகைப்படம் எடுக்கும்போது அவர்கள் தவறி விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
மாணவியின் கையடக்க தொலைபேசியில் அவ்வாறான பல படங்கள் காணப்பட்டதாகவும், புகைப்படம் எடுக்க முயன்றவேளை அவர்கள் 67வதுமாடியிலிருந்து தவறிவிழுந்திருக்கலாம் எனவும், விபத்தாகயிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தற்கொலையா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Srilanka Tamil News - Tamil lk News