வவுனியாவில் வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள்!

  

Tamil lk News

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக ஏ9 வீதியின் நொச்சிமோட்டை பாலம்பகுதியில் வெள்ள நீரானது வீதியை மேவி 3 அடிக்கு மேல் வேகமாக பாய்வதனால் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளிலிருந்து வவுனியா அல்லது தென் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tamil lk news


 இதன் காரணமாக பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் இரண்டு பக்கங்களும் நீண்ட வரிசையில் தரித்து நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.



பேருந்துகளில் வந்த பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளிகியுள்ளனர். இதேவேளை ஏ9 வீதி போக்குவரத்தினை தடை செய்து தாண்டிக்குளம் மற்றும் பறநாட்டாங்கல் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிசார் வீதி தடை போட்டு அதற்கு அப்பால் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.



 வவுனியா பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.



கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன்இ குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

Tamil lk News


அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளமையால் அதன் 3 வான்கதவுகளும் 4.81 மீற்றர் உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.


இதனால் நீர் செல்லும் பகுதியிலும்இ பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்