பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம்? அரசு விடுத்துள்ள எச்சரிக்கை..!

 பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

tamil lk news


எதிர்வரும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.


பேக்கரி உற்பத்தியாளர்களை சந்தித்து பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், இரண்டு அல்லது மூன்று நாட்களில் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் தீர்வு ஒன்றை எடுக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்களிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




அதேவேளை, சண்ட்விட்ஜ் மற்றும் சாதாரண பாண் ஆகியனவற்றின் விலையை குறைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


 450 கிராம் எடையுடைய பாணின் விலை மக்களினால் உணரக் கூடிய வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்