கர்ப்பிணி ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குறித்த பாடசாலையின் பதில் அதிபர் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
திம்புலாகலை கல்வி வலயத்திற்குட்பட்ட சிறிபுர பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய ஆசிரியை சிறிபுர பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கைது செய்யப்பட்ட பிரதி அதிபர் 56 வயதுடையவர்.
இச்சம்பவம் கடந்த 18ஆம் திகதி கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற அன்றே ஆசிரியை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிறிபுர பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்லூரியின் பாதுகாப்பு கமராக்கள் புலனாய்வாளர்களால் ஆராயப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அனைத்து அறிக்கைகளையும் தெஹி அட்டகண்டிய நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதி அதிபரை நேற்று (21) தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் , இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிறிபுர பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஜி.ஆர்.ஜி. நெட்டசூரி மேலும் தெரிவித்தார்.
மேலும் வன்கொடுமைக்கு உள்ளான ஆசிரியை தெஹி அட்டகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Srilanka Tamil News



