திருமலையை வந்தடைந்த சம்பந்தனின் பூதவுடல்...! பொதுமக்கள் இறுதி அஞ்சலி...!

 மறைந்த   இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.


தமிழ் அரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு  சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.

tamil lk news



 அஞ்சலி

இதனையடுத்து சம்மந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.


இந்நிலையில், இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறன்று (07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




இதேவேளை சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்கள், உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்