14 வயது சிறுமிக்கு காதலானால் எற்பட்ட கதி..! இணையத்தில் வெளியான ஆபாச காணொளி....!

 14 வயது சிறுமியின் ஆபாச காணொளியை இணையத்தில் பதிவிட்ட காதலன் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் பொலன்னறுவை, மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


பொலன்னறுவை, அம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய காதலனே கைது செய்யப்பட்டுள்ளார்.

tamil lk news



சந்தேக நபரான காதலன் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில்,


சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரின் வீட்டிற்குச் சென்று சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளதுடன் அதனைக் காணொளியாக எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில், சந்தேக நபருக்கும் சிறுமிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்ட நிலையில் 


சந்தேக நபர் சிறுமியின் ஆபாச காணொளிகளை இணையத்தில் பதிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்