கண்டி (Kandy) - ஹந்தானை பகுதியில் 1700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெ
டுத்துள்ளனர்.
இதன்போது, அரசாங்கத்தால் 1700 ரூபா சம்பளம் அதிகரிக்க அறிவிக்கப்பட்ட போதும் பெருந்தோட்ட நிறுவனங்கள் அதனை அதிகரிக்கவில்லை.
எனவே, தோட்ட தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் அரசாங்கம் அழுத்தங்களை கொடுத்து1700 ரூபா சம்பளத்தை அதிகரிக்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியவாறும் அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.பி.சிவப்பிரகாசம் கலந்துக்கொண்டுள்ளார்.
Srilanka Tamil News



