கொழும்பு - புத்தளம் வீதியில் பாய்ந்தோடும் வெள்ளம்....!

tamil lk news


 கொழும்பு - புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது.


மஹாவெவ தனிவெல்ல தேவாலயத்திலிருந்து மஹாவெவ நகரம் வரையிலான பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. சில பகுதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குளியாபிட்டிய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவெவ லுனு ஓயா மற்றும் ஹெமில்டன் கால்வாயில் நீர் நிரம்பி வழிவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பயணங்களை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது என மாதம்பே மற்றும் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எனவே, பொது மக்கள் அனைவரும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு  புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்