விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து இளவரசி டயானா (Princess Diana), தற்போது மறுபிறவி எடுத்துள்ளதாகவும், அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல் . இவர் அங்குள்ள ஒரு பிரபல சேனலில், தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பெயர் பில்லி காம்பெல் ( David Campbell) .
டேவிட் காம்பெல் இன் மகன் பில்லி ( Billy Campbell) இளவரசி டயானா (Princess Diana) குறித்து கூறும் தகவ்ல்கள் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
மகன் தொடர்பில் டேவிட் காம்பெல் கூறுகையில்,
"1997ல் இளவரசி டயானா (Princess Diana) கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து 18 வருடம் கழித்துதான், பில்லி ( Billy Campbell) எனக்கு பிறந்தான்.. 2 வயது குழந்தையாக இருந்தபோதே, டயானாவின் போட்டோவை காட்டி, அது நான்தான் என்று மழலை வார்த்தைகளில் சொன்னான்.
நாங்கள் அனைவருமே இதைக் கேட்டு சிரித்துவிட்டோம். ஆனால், 4 வயதில், டயானா (Princess Diana) பற்றின வாழ்க்கை விவரங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான் டயானாவின் வாழ்க்கை, அவரது துயர மரணம் இதுகுறித்தெல்லாம் துல்லியமாக பில்லி சொன்னான்.
அவன் பேசியதை கேட்டு, நானும் என் மனைவியும் அப்படியே வாயடைத்து போய்விட்டோம். காரணம், அதுவரை டயானா (Princess Diana) பற்றியோ, இங்கிலாந்து அரச குடும்பம் பற்றியோ நாங்கள் இவ்வளவு துல்லியாக அறிந்திருக்கவில்லை.
டயானாவின் (Princess Diana) மொத்த குடும்ப விவரங்களையும் பில்லி ( Billy Campbell) கூறி எம்மை மேலும் ஆச்சயப்படுத்தினார். டயானாவுக்கு ஜான் என்ற உடன்பிறந்த அண்ணன் இருந்தாராம்.



