கடந்த வருடங்களில் இருந்ததை விட குரங்கு காய்ச்சலை எதிர்கொள்வதற்கு இலங்கை (Srilanka) தற்போது சிறந்த முறையில் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நோயினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
Srilanka Tamil News



