ஆசிரியை போல் நடித்து பெண் ஒருவர் செய்த அட்டகாசம்

tamil lk news


 பதுளையில் ஆசிரியை போல் நடித்து பல கடைகளில் பல நாட்களாக பொருட்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேக நபரான குறித்த பெண் பொத்துஹெர பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.


 பதுளை பகுதியை சேர்ந்த நிவந்தி சுமன அலோக பண்டார என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



திருடப்பட்ட சில்லறைப் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்